இன்று ஐப்பசி சதயத் திருநாள். தென்னகத்தின் மாமன்னனாம் இராஜராஜ சோழனின் பிறந்த நாள். ஆயிரம் ஆண்டுகட்டு மேலாகியும் வருடா வருடம் இம்மாமனிதனின் பிறந்த நாள், ஒரு பெரும் விழாவாகத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் கொண்டாடப்படுகிறது என்றால், அந்த உயர்ந்த ஆன்மாவின் புகழை நாவால் அளவிட்டு சொல்லிடவும் முடியுமோ! இருப்பினும் பொன்னியின் செல்வனைப் பற்றி பேசவும் எழுதவும் இதையே தகுந்த சந்தர்ப்பமாகக் கொண்டு, அவருக்கு என்னால் இயன்றதொரு காணிக்கையாக இப்பதிவினை சமர்ப்பிக்கின்றேன்.
இராஜராஜ சோழர் |
இராஜராஜ சோழரின் காலம் தமிழகத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. அவரது ஆட்சிக்காலம் கி.பி. 985 முதல் 1014 வரை ஆகும். இருப்பினும் அதற்கு முன்பே தனக்கு எளிதில் கிடைத்திருக்கக்கூடிய ஆட்சியை தனது சிற்றப்பா உத்தம சோழருக்கு அளித்து வரலாற்றிலும் மக்கள் மனதிலும் நீங்காத இடம் பெற்றார். உத்தம சோழரின் ஆட்சியின் போதிருந்தே சோழ நாட்டின் கப்பற்படையை பலப்படுத்தினார். உத்தம சோழரின் ஆட்சிக்குப் பிறகு மன்னனாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தான் ஆட்சி பொறுப்பேற்ற பின், சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனையும், பாண்டிய மன்னன் அமரபுஜங்க பாண்டியனையும் போரில் வெற்றி கொண்டார். இலங்கை மீது படையெடுத்து அதன் தலைநகரைக் கைப்பற்றினார். மேலும் குடகு நாடு, கங்கப்பாடி, நுளம்பப்பாடி, கலிங்கநாடு ஆகிய தேசங்களையும், கடல்கடந்த இலட்சத்தீவு, கடாரம் போன்ற நாடுகளையும் சோழ நாட்டிற்கு செலுத்தும் சிற்றரசுகளாக்கினார்.
இராஜராஜரின் நிர்வாகத்திறன் வியக்கத்தக்கதாகும். அவரது ஆட்சியில் நாட்டில் அமைதி நிலவியது. செல்வம் கொழித்தது. அற்புதமான நீர்ப்பாசன முறையால் உணவு உற்பத்தி பெருகியது. நிர்வாக வசதிக்காக சோழ நாடு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. மண்டலங்கள் கோட்டம் மற்றும் வளநாடுகளாக பிரிக்கப்பட்டன. அவ்வப்பகுதி மக்களே அதன் நிர்வாக அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் குடவோலை முறை மேலும் தொடர்ந்து செயல்பட்டது.
தஞ்சைக் கோவில் கல்வெட்டு |
இராஜராஜரின் ஆட்சியில் தான் முழுவீச்சிலான தணிக்கை முறைகளும் செயல்பட்டன. அரசு சார்ந்த நிர்வாகத்திலோ, கோவில் நிர்வாகத்திலோ மற்றும் எந்தத் துறையிலோ ஒழுங்கீனங்கள் இல்லாதிருக்க தணிக்கை முறை செயல்படுத்தப்பட்டன.
மேலும் நாட்டின் நடப்புகள் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறிக்கப்படும் முறை முன்பே இருந்து வந்தாலும் அவற்றில் ஆட்சி ஆண்டு போன்ற முக்கிய தகவல்கள் சேர்க்கப்பட்டு இன்றளவும் சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் வகையில் அந்நாளின் செயல்பாடுகளுக்கு ஆதாரமான ஆவணங்களாக உள்ளன.
ராஜராஜ சோழன் திரைப்படத்தில் தேவாரப் பாடல்களை சேகரிக்கும் காட்சி |
அப்பரும், திருஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்திகளும் அருளிய தெய்வப் பாடல்களின் மீது பற்று கொண்டு அப்பொக்கிஷத்தை தில்லையம்பதியிலிருந்து மீட்டு நம்பியாண்டார் நம்பிகளின் மூலமாக அவற்றை தேவாரத் திருமுறைகளாக தொகுத்து தினமும் கோவில்களில் அவற்றை பாட ஓதுவார்களை நியமித்து, இன்றளவும் நாம் அவ்வினிய தெய்வீக பாடல்களை அறிய வழிவகுத்தவர் திருமுறை கண்ட சோழனாம் இராஜராஜர் ஆவார்.
கஜ சம்ஹார மூர்த்தி - யானை உரி போர்த்திய மூர்த்தி |
மேலும் இராஜராஜரின் ஆட்சியின் கீழ் பல்வேறு கலைகளும் மறுமலர்ச்சியடைந்தன. ஆடல், இசை, நாடகம், சிற்பம், சித்திரம், கட்டுமானக் கலை, ஆகிய அனைத்து கலைகளும் வளர்ச்சியடைந்தன. அற்புத கலைப் படைப்பாக செப்புத் திருமேனிகள் விளங்கின. நாடெங்கிலும் மக்களுக்கு பயன்படும் வகையில் ஆதுரசாலைகள் (மருத்துவ சாலைகள்) நிறுவப்பட்டன. இராஜராஜர் அனைத்து சமயத்தினருக்கும் ஆதரவு அளித்து, அனைவரும் ஒன்றுபட்டு வாழுமாறு வழிவகை செய்தார்.
தஞ்சைப் பெருவுடையார் கோவில் |
இராஜராஜர் தனது பெரிய பாட்டியாகிய செம்பியன் மாதேவியின் விருப்பத்திற்கிணங்க பல்வேறு கோவில்களுக்கு கருங்கல் திருப்பணி செய்ய ஆணையிட்டார். பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் அடிமுடி தெரியாதவாறு உயர்ந்து நின்ற ஈசனுக்கு உயரமானதொரு கோவில் எடுப்பிக்க வேண்டுமென்று ஆவல் மனதில் குடிகொள்ள, தஞ்சையில் பெருவுடையார் கோவிலை எடுப்பித்தார் சிவபாதசேகரன் என வழங்கப்படும் ஸ்ரீ இராஜராஜர். ஆயிரம் ஆண்டுகள் கடந்து, பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாண்டி, பல்வேறு மனித ஆக்கிரமிப்புகள் மற்றும் படையெடுப்புகளையும் தாண்டி, உயர்ந்து நிற்கும் அற்புத படைப்பாக தஞ்சைப் பெருவுடையார் கோவில் விளங்குகிறது. நெடிதுயர்ந்திருக்கும் துவாரபாலகர்கள், அற்புத சிலா வடிவங்கள், விரலளவே உள்ள சிற்பங்கள், ஈசனின் பெருமைகளையும் அவனது பக்தர்களின் கதைகளையும் கூறும் அற்புத சிற்பங்கள், கர்ப்பகிருஹத்தை சுற்றியுள்ள இருண்ட குறுகிய கூடத்தின் கருங்கற்சுவரில் ஃப்ரெஸ்கோ ஓவியங்கள், பரதநாட்டிய கரணங்களின் சிற்பங்கள் என தஞ்சைக் கோவிலே ஒரு அரும்பெரும் கலைப் பெட்டகமாக விளங்குகிறது.
திரிபுராந்தகர் - ஃப்ரெஸ்கோ ஓவியம் |
கோவில்களுக்கு அளிக்கப்பட்ட நிவந்தங்கள், காணிக்கைகள் ஆகியவற்றை கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் மூலம் ஆவணப்படுத்தினார் அருள்மொழி எனும் இயற்பெயர் கொண்ட இராஜராஜர். தான் அளித்ததை மட்டுமின்றி அரசகுல பெண்டிரும், பிற அதிகாரிகளும், பொது மக்களும் யாவருடைய காணிக்கைகளையும் முறையாக கல்வெட்டில் பொறித்திட செய்தார். தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் நாட்டியமாட அமர்த்தப்பட்ட 400 நடன மங்கையரின் பெயரையும் கல்வெட்டில் பொறித்திட செய்தார்.
சிவபெருமான் - செப்புத் திருமேனி |
இராஜராஜரின் சிறப்புப் பெயர்களாவன:
1. அபயகுலசேகரன்
2. அரிதுர்க்கலங்கன்
3. அருள்மொழி
4. அழகிய சோழன்
5. இரணமுகபீமன்
6. இராஜாச்ரயன்
7. சோழேந்திரசிம்மன்
8. இராஜ மார்த்தாண்டன்
9. இராஜேந்திரசிம்மன்
10. இராஜ விநோதன்
11. உத்தம சோழன்
12. இரவிகுல மாணிக்கன்
13. இரவிவம்ச சிகாமணி
14. இராஜகண்டியன்
15. இராஜ சர்வக்ஞன்
16. இராஜராஜன்
17. இராஜகேசரிவர்மன்
18. திருமுறை கண்ட சோழன்
19. தெலிங்ககுல காலன்
20. நிகரிலி சோழன்
21. நித்ய விநோதன்
22. பண்டித சோழன்
23. உத்துங்கதுங்கன்
24. உய்யக்கொண்டான்
25. உலகளந்தான்
26. கேரளாந்தகன்
27. சண்டபராக்ரமன்
28. சத்ரு புஜங்கன்
29. சிங்களாந்தகன்
30. சிவபாத சேகரன்
31. சோழகுல சுந்தரன்
32. சோழ மார்த்தாண்டன்
33. பாண்டிய குலாசனி
34. பெரிய பெருமாள்
35. மும்முடிச் சோழன்
36. மூர்த்தவிக்கரமாபரணன்
37. ஜனநாதன்
38. ஜெயங்கொண்ட சோழன்
39. க்ஷத்திரிய சிகாமணி
40. கீர்த்தி பராக்கிரமன்
41. சோழ நாராயணன்
42. தைல குலகாலன்
பல நாடுகளை வெற்றி கொண்டும், மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக இருந்தும்கூட, மிகுந்த தெய்வ பக்தியோடு எளிமையாக வாழ்ந்தவர் ஸ்ரீ இராஜராஜ சோழர் ஆவார். தனக்கு ஈடு இணையாக தனது மகன் இராஜேந்திர சோழரையும் உருவாக்கி ஒரு சிறந்த அரசனாகவும், ஒரு பாசமிகு தந்தையாகவும் தனது கடமைகளை சரிவர நிறைவேற்றினார்.
இராஜராஜ சோழர் |
அத்தகைய மேதகு ஸ்ரீஸ்ரீஸ்ரீ இராஜராஜரின் புகழ் சூரிய சந்திரர்கள் உள்ளவரை இவ்வுலகில் நிலைத்திருக்கும். அவர் ஆட்சியின் கீழ் இருந்த இடத்தில் பிறந்ததே யான் பெற்ற பெரும்பேறாக கருதுகிறேன். அத்தகு உயர்ந்த மாமன்னனுக்கு நாம் செய்யக் கூடியது ஒன்றே ஒன்று தான். அவர் வளர்த்த கலையை பாதுகாக்க வேண்டும். அவ்வாறு பாதுகாக்க இயலாவிடினும் அவற்றை அழித்து விடாது இருப்போமாக!
வாழ்க ஸ்ரீ இராஜராஜரின் புகழ்! வளர்க அவர் வளர்த்த கலைகள்!!!
படங்கள் உபயம்: இணையம்
அன்புள்ள வர்த்தினி,
ReplyDeleteஅருள் மொழி வர்மரின் பெருமைகளை மிக அழகாகவும் சுருக்கமாகவும் மிக அருமையாக சொல்லி உள்ளீர்கள். மிகவும் நன்றி.
தங்கள் கட்டுரையில் “இராஜராஜரின் ஆட்சியில் தான் முழுவீச்சிலான தணிக்கை முறைகளும் செயல்பட்டன. அரசு சார்ந்த நிர்வாகத்திலோ, கோவில் நிர்வாகத்திலோ மற்றும் எந்தத் துறையிலோ ஒழுங்கீனங்கள் இல்லாதிருக்க தணிக்கை முறை செயல்படுத்தப்பட்டன” என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
அருள்மொழி வர்மனின் வெற்றிக்கும் சோழ நாட்டின் செழிப்புக்கும் இந்த தணிக்கை முறையும் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும் என எண்ணுகிறேன்.
இது பற்றி தங்களுக்கு விவரங்கள் தெரியுமா? தெரிந்தால் எனக்கு உதவிகரமாக இருக்கும்.
தங்கள் அன்புள்ள
டாக்டர் எல். கைலாசம்
அன்புள்ள ஐயா,
ReplyDelete"Crime and Punishment under the Imperial Cholas" என்ற கட்டுரையை சமீபத்தில் படித்தேன். அதைப் படித்ததிலிருந்து நான் புரிந்து கொண்டதை வைத்தே தணிக்கை முறைகள் பற்றி கூறியுள்ளேன். அந்த கட்டுரைக்கான லிங்க் (link) இதோ:
http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=218
நன்றி
வர்தினி
Vardhini,
ReplyDeleteA Small suggestion - Will it make better sense if you added the current location of regions that were known in a different name as additional information?
For instance I don't know where exactly Kudagunaadu, Kalinganaadu now falls. People might now the magnitude of regions covered if they can relate to the current areas as per modern names (to the extent that can be provided by you).
Just a suggestion.
Otherwise the style of presenting is too good. Keep writing..
Ponniyin Selviye...
ReplyDeleteGood. It was bit verbose but otherwise, I liked it. Even I am eager to know the area covered by the region of Chola (Kudagunadu and what else???).
@Manjula: Thank you very much.
ReplyDeleteAs far as I have understood, the places குடகு நாடு, கங்கப்பாடி, நுளம்பப்பாடி - these constitute Mysore; கலிங்க நாடு is Orissa and கடாரம் is Malaysia.
@Venkat Anna: Thank you very much. Will come back to you with more details of the chola region.
Hi Vardhini,
ReplyDeleteVery Nice writing on Raja Raja Chola..came to know many informations about the great king..Thanks and keep up the good work..
Swarna Mahadevan
Very nice. Written so well. I did not know that Raja Raja Chozhan had 42 names.
ReplyDeleteNice Article next time pl add some coins photos
ReplyDeleteand write about the coins also
raman sankaran
@Swarna manni & Raji Aunty: Thank you so much.
ReplyDelete@Raman Sir: Thank you sir. Surely will write about coins also.
Very nice article Vardhini!
ReplyDelete@Meera aunty: Thank you so much.
ReplyDeletenice start - would help if you put sub headings for each of his traits. btw, some pointers
ReplyDeleteஉத்தம சோழர் சந்ததியின்றி இயற்கை எய்திடவே, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் !!! - He has a son and he occupied a post in RRC's administration - find out his name ( we have discussed this in psvp)
குடகு நாடு, கங்கப்பாடி, நுளம்பப்பாடி, கலிங்கநாடு ஆகிய தேசங்களையும், கடல்கடந்த இலட்சத்தீவு, கடாரம் போன்ற நாடுகளையும் தனது ஆட்சியின் கீழ் கொணர்ந்தார் - of these only Chera , Pandya, maldives and Ilam came under direct Chola rule. Rest were mostly overlordship.
அவ்வப்பகுதி மக்களே அதன் நிர்வாக அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையும் நிறுவப்பட்டது. - The Kudavolai murai is actually from much before - the famous Utiramerur inscription is that of Parantaka Chola.
மேலும் நாட்டின் நடப்புகள் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறிக்கப்பட்டு இன்றும் அந்நாளின் செயல்பாடுகளுக்கு ஆதாரமான ஆவணங்களாக உள்ளன - Plates and inscriptions are plenty before RRC as well, you will find a lot of Pallava seppedugal - however, what was unique to him was the denoting of the year of reign- aatchi aandu, which gave vital clues as to the progression of conquests.
இராஜராஜரின் ஆட்சியில் பல்வேறு கோவில்கள் கற்றளிகளாக எழுப்பப்பட்டன - actual credit must go to Sembian Madevi
தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் நாட்டியமாட அமர்த்தப்பட்ட 407 நடன மங்கையரின் பெயரையும் கல்வெட்டில் பொறித்திட செய்தார். - there is some debate on 400 or 407 http://www.varalaaru.com/Default.asp?articleid=1024
rgds
vj
www.poetryinstone.in
@VJ: Thank you very much for your valuable feedback. Sorry for some of the ignorant details in the post. But your feedback has given me more interest in acquiring more knowledge on Cholas and especially RRC. Thanks again.
ReplyDeleteRgds
Vardhini